தோப்புகரணம் – Situps

தோப்புகரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்:

தோப்புகரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதரணமான ஒன்று, தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதிவராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புகரணம் போட வைப்பார்கள். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பக்தி பரவசத்துடன் பிள்ளையாருக்கு முன்பு தோப்புகரணம் போடுவார்கள். ஆனால் இன்று இந்தப் பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறது.

பிள்ளையார் முன்பு நின்று தோப்புகரணம் போடுபவர்கள் கூட முழுமையாக தோப்புகரணம் போடுவது கிடையாது. சும்மா தோப்புகரணம் போடுவது போல மூன்று முறை கடமைக்காக குதித்துவிட்டு வருகிறார்கள். ஆனால் தோப்புகரணம்  போடும் போது வலதுகை இடது காதின் கீழ்பகுதியையும் இடதுகை வலது காதின் கீழ்ப்பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும்.

தோப்புகரணம் போடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன என்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.

தோப்புகரணம் போடும் போது காதுகளின் முக்கிய வர்ம புள்ளிகளை (அக்குபஞ்சர்) அழுத்திப் பிடிப்பதனால்  மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் சமமான தூண்டுதல் அடைகின்றது. மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.

ஆட்டிசம் – தனக்கென்று  தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாகப் பயணிப்பவர்கள் தான்’ ஆட்டிசம்’ போன்ற மன இறுக்கம் சம்பந்தபட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால்  குணமடைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை தினமும் 5 நிமிடம் செய்தாலே வியத்தக மாற்றங்களைக் காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவர்கள் இன்றுதான் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே கண்டுபிடித்துள்ளனர். நாம்தான் முற்போக்குகள் ஆயிற்றே’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s