Neera

தென்னை நீரா  என்பது இயற்கையான பானம்.

தென்னை விவசாயிகள், பனை விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்கள், மண் பானை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
“நீரா ” என்பது என்ன?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தென்னை அல்லது பனைமரப் பாளையை சீவி கட்டிவிடும்போது கிடைக்கும் 4%லிருத்து 6% வரை ஆல்கஹால் அடங்கிய சத்துமிக்க இனிப்புசுவையுடைய இயற்கைப் பானம் ஆகும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீராவில் என்னதான் உள்ளது?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உடல் நலத்துக்கு தேவையான சர்க்கரை, வைட்டமின் ஏ, பி
மற்றும் சி, மினரல், இரும்பு சத்து, பாஸ்பரஸ்.
அமினோ அமிலம் போன்றவை உள்ளன.
(The Neera is rich in minerals like potassium, magnesium, zinc and iron. )

தாய்பாலில் உள்ள லாரிக் அமிலம் நீராவில் உள்ளது மிகச்சிறப்பாகும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீரா உடல் நலத்திற்கு நல்லதா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆம்.நீரா குடித்தால் உடல் வெப்பம் குறையும்.

ஜீரணத்திற்கு உகந்தது.

மலசிக்கலுக்கு சிறந்தது.

நீரா தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

இது ஒரு சிறந்த போதை நீக்கி ( Detox drink) பானம் ஆகும்.

நீராவில் குறைந்த சர்க்கரை அளவு ( Very low glycemic index ) இருப்பதால் சர்க்கரை நோயாலிகள் பயமில்லாமல் அருந்தலாம்.

சளிபிடித்திருத்தால்,  நீராகுடித்தால் விரைவில் குணமாகும்.

தி இண்டியன் இன்ஸ்டிடூட் ஆப் சைன்ஸ்,  பெங்களூரு,  ஆய்வில் ,நீராவால் ஈரல் (Liver) சம்ந்தப்பட்ட நோயை குணமாக்கின்றன.
( The magical property of neera to remove “acetaldehyde” (the toxic metabolic product of ethanol causing liver damage) was proven in the study.)

நீராவில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

நீராவில் குளுடாமிக் அமிலம்(Glutamic acid – Amino acid) அதிகமாக உள்ளதால் புரோட்டீன் சேர்க்கை நடைபெற்று உடல் கட்டுக் கோப்பாக இருக்கும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கவனிக்க வேண்டியவை என்ன?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நீராவை குளிர்ந்த நிலையில் (Refrigerator) வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் வெப்பநிலையில் நொதித்தல்(Fermentation ) ஏற்பட்டு ஆல்கஹால் சுமார் 4% லிருத்து 8% சதவீதமாக மாறும். அதாவது ஒரு பீர் பாட்டில் உள்ள அளவு அதிகரிக்கும்.

நீராவை பாட்டில் அடைத்து குளிர்ந்த நிலையில் சுமார் 6 மாதம் கெடாமல் வைத்து ஏற்றுமதி செய்யலாம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தென்னை பானம் ஓர் உணவே,  மது அல்ல;
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவது மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47 சொல்கிறது.

கேரளாவில் மது கொள்கை
மற்றும் மதுவிலக்கு
தொடர்பாக நியமிக்கப்பட்ட
உதயபானு கமிஷன் தனது
அறிக்கையில், “கள் மது அல்ல;உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை
அளித்துள்ளது.

சட்டம் வழங்கிய உணவு தேடும் உரிமையைத் தமிழக அரசு பறிக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
ஆகையால் திட்டமிட்டே நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான
கமிஷனின், கள் குறித்த அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது.இது மிகவும்
அநீதியான செயலாகும்.

1927 இல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை
வெட்டிய பெரியார் தனது
நிலைப்பாட்டை மாற்றிக்
கொண்டு 1963 இல்
கும்பகோணத்தில் நடைபெற்ற கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க
ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீரா இறக்கும் நாடுகள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆப்ரிகா நாடுகளான கென்யா, கானா காங்கோ,நைஜீரியா

மெக்ஸிகோ

ஆசியா நாடுகளான இலங்கை,மியன்மார் மலேசியா, இந்தோனேசியா, பிலிபைன்ஸ் மற்றும் மாலத்தீவுகள்.

இந்தியாவில் தமிழகத்தைத் தவிர கேரளா,ஆந்தரா,கர்நாடாகா,தெலுங்கானா கோவா போன்ற இடங்களில் நீரா இறக்கப் படுகிறது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>தமிழகத்தில் மற்றும் ஏன் அனுமதி இல்லை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

1987ல் தமிழகத்தில் கள் இறக்கவதற்கு தடை விதித்தது

இருபெரும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பல சாராய ஆலை முதலாளிகளாக இருப்பதால், இயற்கை பானமான தென்னையிலிருத்து நீரா இறக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது.

அதிகம் படித்த மக்களுள்ள கேரளாவில் தடை இல்லை.ஆனால் தமிழகத்தில் தடை என்பது மிகப்பெரிய சாராய ஆலை முதலைகளால் தானே.

விஸ்கி, பிராந்தி வகைகளால் சுமார் 42% ஆல்கஹாலை குடிப்பதால் கல்லீரல், இரத்த குழாய்கள் பாதிப்பு (vascular diseases), இருதய பாதிப்பு,  குடல் புண்  , நரம்பு தளர்ச்சி, மனநிலை பாதிப்பு,  மூளை பாதிப்பு, இரத்தக்கொதிப்பு நோய் , புற்றுநோய் என பல நோயிகளுக்கு ஆளாக்கும் பிராந்தியை அரசு நடத்துவது வேதனையானது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தென்னை மற்றும் பனையிலிருந்து உடனடியாக நீரா இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

தென்னை , பனை விவசாயிகள், மரம் ஏறுபவர்கள்,மண்பானை தொழிலாளர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் என பல லட்ச மக்களின் வாழ்வாதாரத்தை  ,அரசு மீட்கவேண்டும்.

மதுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவந்து இதற்கென தனிசட்டம் கொண்டுவந்து விஸ்கி ,பிராந்தி வகைகளுக்கு பூரண விலக்கு தந்து இயற்கைப் பானமான தென்னை நீராவை டாஸ்மாக் ஊழியரை வைத்து  விற்பனை செய்யலாம்.

இதற்கென வரிவிதித்து அரசுக்கு வருவாய் ஈட்டலாம்.

நீராவை(Palm wine) டின்னில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம்.பல நாடுகள் இறக்குமதி செய்யத் தயாராக இறுக்கின்றன.

ஒரு தென்னைமரத்திலிருந்து தேங்காய் இறக்கினால் வருடத்திற்கு  ரூ 1000 சம்பாதிக்கலாம்.நீரா இறக்கினால் சுமார் 4000 சம்பாதிக்கலாம். அதனால் அரசு வரிவிதிப்பதில் தவறில்லை.

தமிழகத்தில் 5 கோடிக்குமேல் தென்னை மரங்கள் உள்ளன. மிகச்சிறந்த வாழ்வாதாரத்தை மீட்க முடியும்.

ஒரு விவசாயி சுமார் 300 மரங்கள் வைத்திருந்தால், அதில் 100 மரங்களில் தான் நீரா இறக்கலாம். பிறகு ஒருவருடம் கழித்து  மாற்றிக்கட்டலாம். அவிழ்த்து விட்ட மரங்கள் இரண்டு மடங்கு தேங்காய் உற்பத்தியாகும்.ஆகவே தேங்காய் உற்பத்தியும் குறையாது.

¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s